Home » » ஆர்டர் செய்தது பென் டிரைவ், கிடைத்தது காலி டப்பா, இது தான் ப்ளிப்கார்ட் விற்பனை ரகசியம் வீடியோ ஆதாரம்

ஆர்டர் செய்தது பென் டிரைவ், கிடைத்தது காலி டப்பா, இது தான் ப்ளிப்கார்ட் விற்பனை ரகசியம் வீடியோ ஆதாரம்

இந்திய இணையதள வர்த்தக சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் தினமும் பல குறைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுகின்றது.
சமீபத்தில் கூட ஸ்னாப்டீல் தளத்தில் ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு செங்கல் அனுப்பப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது, அந்த வகையில் இம்முறை ப்ளிப்கார்ட் மாட்டி கொண்டது.

மைசூரை சேர்ந்த ஆதார்ஷ் ஆனந்தன் ப்ளிப்கார்ட் தளத்தில் பென் டிரைவ் ஒன்றை ஆர்ட்ர செய்துள்ளார் ஆனால் அவருக்கு காலி டப்பா தான் கிடைத்தது. தவறுகள் அறங்கேருவது சாதாரண விஷயம் தான் ஆனால் இந்த தவறு ஒரு முரை அல்லது இரு அல்ல மூன்று முறை நடந்துள்ளது தான் ஆனந்தனை கடுப்பாக்கியுள்ளது.

இரு முறை காலி டப்பாக்களை பெற்ற ஆனந்தன் தனக்கு கிடைத்த டப்பாக்களை படம்பிடித்து சமூகவலைதளங்களில் பதிவு செய்தார், இருந்தும் ப்ளிப்கார்ட் தனது தவறை உணராமல் ஆனந்தன் பென் டிரைவை சுலபமாக எடுத்துவிட்டு பென் டிரைவ் இல்லை என்று படம் எடுத்துள்ளார் என்றே கூறி வந்தது. இதனால் மூன்றாவது முறையும் பென் டிரைவ் ஆர்டர் செய்த ஆனந்தன் இம்முறை தனக்கு வந்த பார்சலை வீடியோ படமாக எடுத்தார் இம்முறையும் தனக்கு காலி டப்பா தான் கிடைத்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆனந்தன், மூன்றாவது முறையும் காலி டப்பாவெ பார்த்து அதிர்ச்சியடைந்தேன், ப்ளிப்கார்ட் செய்த தவறுக்கு எனக்கு சன்மானம் ஏதும் தேவை இல்லை ஆனால் செய்த தவறை அவர்கள் உண்ர்ந்தாலே போதும் என்று தொரிவித்தார்.

கடைசி முறையும் காலி டப்பா கிடைத்த போது எடுக்கப்பட்ட வீடியோ கீழே




நன்றி:http://tamil.gizbot.com/

Popular Posts