Home » » ஆண்களுக்கு மனைவி இரண்டாவது தாய் மட்டும் அல்ல, முதலாவது மகளும் கூட

ஆண்களுக்கு மனைவி இரண்டாவது தாய் மட்டும் அல்ல, முதலாவது மகளும் கூட

காதல் காவியம், ஓவியம், பூப்போன்றது, மென்மையானது என வாய்க்கு வந்தபடி எல்லாம் ஒரு கூட்டம் பேசிக்கொண்டு தான் இருக்கும்.
ஏனெனில், காதலிப்பது அவர்களின் குலத்தொழில். நாம் யாருமே நமது தொழிலைப் பற்றியே தரக்குறைவாக பேசமாட்டோம் அல்லவா, அது போல தான். ஆனால், உண்மையில் காதல் சிறப்பதிலும், அலுப்பதிலும் காதலர்களின் பங்கு தான் அதிகம் இருக்கிறது. சூழ்நிலைகளை நாம் எவ்வாறு கையாள்கிறோமோ அவ்வாறு தான் நமது காதல் வாழ்க்கையும் அமையும். ஒன்றுமில்லாத விஷயத்திற்காக பிரிந்து சென்ற காதல் ஜோடிகளும் இருக்கின்றன. பெரிய பெரிய பிரச்சனைகளை கடந்து மனமொத்து வாழும் காதல் ஜோடிகளும் இருக்கின்றன.

காதலில் பெண்கள் விட்டுக்கொடுத்து போவது கொஞ்சம் சிரமம். அது அவர்களின் அதீத காதலின் வெளிபாடு. ஆண்கள் விட்டுக்கொடுத்து போக வேண்டும் என அவர்கள் எண்ணுவார்கள். இதில் எந்த ஒரு குற்றமும் இல்லை. வாழ்க்கை முழுவதும் ஒன்றாக வாழ விரும்பிவிட்டு ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு ஈகோ பார்த்துக் கொண்டு பிரிவதா? சில விஷயங்கள் பெண்களுக்கு தங்களது காதலர்கள் தான் சிறந்தவர்கள் என தோன்ற வைக்கும். ஈகோ விஷயம் கூட அப்படி தான், சண்டையிட்ட பின் ஆண்களாக முன்வந்து பேசினால் அவர்களது தோழிகளிடம் பெருமிதமாய் சொல்லிக் கொள்வார்கள், நான் எவ்வளவு சண்டையிட்டாலும் அவன் என்னிடம் பேசாமல் இருக்கமாட்டான், அவனுக்கு என மேல் அவ்வளவு காதல் என்று.

ஆண்களுக்கு அவர்களது மனைவி இரண்டாவது தாய் மட்டும் அல்ல, முதலாவது மகளும் கூட. இதை அறிந்த ஆண்கள் எப்போதும் காதலில் தோல்வி அடைவதில்லை. இதை உணர்ந்த பெண்கள் அவர்களது காதலர்களை பிரிவதும் இல்லை. பெண்கள் தங்களது காதலர்கள் எப்போதும் சிறந்தவர்களாக இருக்க விரும்புவர்கள். மற்றவர் முன்பு அவர்களைப் பற்றி பெருமையாக பேச ஆசைப்படுவர். அப்படிப்பட்ட சிறப்புமிக்க காதலனாய் திகழ நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் கண்டிப்பாக அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பவை...

மரியாதை அளிப்பது

காதலில் கிண்டலும், கேலிகளும் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் கூட முழுவதுமாக கொடுக்க வேண்டும். இது உங்களை தனித்துவமாய் எடுத்துக்காட்டும்.

பிரச்சனைகளை சமாளிப்பது

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் பயந்து ஓடாமல், எதிர்த்து நின்று சமாளிக்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இது உங்கள் காதலிக்கு மட்டுமல்ல, அவர்களது சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களுக்கும் கூட பிடிக்கும். இதன் மூலம் உங்களது மதிப்பு கூடும்.

வேடிக்கையாக

காதலனோடு தான் மிகவும் வேடிக்கையாக நடந்துக் கொள்ள விரும்புவார்கள் பெண்கள். நீங்கள் அதை ரசிக்க வேண்டும். அவருக்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டும். இது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். இதை போய் நீங்கள், " லூசு மாதிரி பண்ணாம சும்மா இரு..." என்று கூறிவிடாதீர்கள். குழந்தை மனம் கொண்ட அவர்கள் வெம்பிவிடும்.

பேசுவதை கவனிக்க வேண்டும்

பெண்களுக்கு அவர்களது காதலர்களுடன் பேச நிறையவே பிடிக்கும். மணிக்கணக்காக பேச விரும்புவார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் பேச நினைப்பதற்கு காரணம் இது தான். அவர்கள் பேசும் போது காது கொடுத்து கேளுங்கள். ஒருவேளை உங்களுக்கு வேலை இருந்தால், அதை பொறுமையாக கொஞ்சம் காதலோடு சொல்லி புரிய வையுங்கள் அவர்கள் புரிந்துக்கொள்வார்கள். எடுத்த எடுப்பிலேயே கடித்து கொதரிவிடாதீர்கள்

உறுதுணையாக

பெண்கள் மனதளவில் வலிமை அதிகமானவர்கள். ஆயினும், உடன் யாராவது துணையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். குறிப்பாக அவர்களது காதலர்கள். அவர்களது முக்கியமான தேர்வுகளின் போது, முக்கியமான தருணங்களில் நீங்கள் அவர்களுடன் இருக்க வேண்டியது அவசியம்.

பிறந்தநாள்

அவர்களது பிறந்தநாளை நீங்கள் மறந்துவிட்டாலும் கூட, அந்த நாளிலேயே அவர்களை நீங்கள் ஒரு சிறந்த காதலர் என்று நிரூபிக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் சற்றும் எதிர்பாராதவிதமாக நீங்கள் உங்களது பரிசை அவர்களிடம் சமர்பிக்க வேண்டும்

நேரம் செலவிடுவது

நீங்கள் பில்கேட்ஸ்க்கு மேலாகவும் ஒபாமாவிற்கு கீழாகவும் கூட மிக முக்கியமான வேலைகளில் இருக்கலாம். ஆனால், உங்களது காதலியுடன் அவர்கள் எதிர்பார்க்கும் தருணங்களில் நேரம் செலவளிப்பது மிக மிக முக்கியம்.

உற்சாகம்

உங்கள் காதலி சோகமாக இருக்கிறார் என அப்படியே விட்டுவிட கூடாது. அவர்களை உற்சாகம் அடைய செய்ய வேண்டியது உங்களது கடமை. அவர்களது இரட்டிப்பு ஆக்க வேண்டும்.

 நன்றி: http://tamil.boldsky.com

Popular Posts