Home » » ஃபேஸ்புக் ஆன்லைன் ஷாப்பிங்..!

ஃபேஸ்புக் ஆன்லைன் ஷாப்பிங்..!

ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றது. அதன்படி அந்நிறுவனம் க்ரூப்எம் எனும் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கின்றது. மேலும் ஷாப்பிங் விழா நடத்த ஆகஸ்டு 12 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 29 ஆம் தேதி வரை பிரத்யேக இணையதளம் துவங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தின் சக்தியை கொண்டு இவ்விழாவில் சுமார் 10 கோடி வாடிக்கையாளர்களை கவர முடியும் என ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை புதிய ஷாப்பிங் தளத்திற்கு கொண்டு வர முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

விளம்பரதாரர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.3 கோடி மற்றும் இணைந்து வழங்கும் விளம்பரதாரர்களுக்கு ரூ.1.5 கோடி என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் விழாக்கள் பிரபலம் அடைந்து வருவதோடு இல்லாமல் ஆன்ளைன் ஷாப்பிங் தளங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

நன்றி http://tamil.gizbot.com

Popular Posts