அவர் பெயர் குபேந்தர் ராவ். மத்திய அரசு வேலை. திருமணம் ஆகி இரண்டே வருடங்கள். திருமணதிற்கு அலுவலக நண்பர்கள், அதிகாரிகள் அனைவரையும் அழைத்திருந்தார் குபேந்தர். அந்த உயர் அதிகாரிக்கு, குபேந்தரின் புது மனைவியை மிகவும் பிடித்துப் போனது.
தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். பின்னர் அடிக்கடி ஹோட்டல் அங்கு இங்கு என்று சாப்பிட மனைவியுடன் வரச்செய்தார் அதிகாரி. குபேந்தரும் அதிகாரியே அழைக்கிறார் என்று பெருமையுடன் அடிக்கடி மனைவியோடு விருந்துகளுக்கு சென்றான்.
ஒருநாள் தயங்கி தயங்கி, அந்த கேவலமான அதிகாரி குபேந்தரரிடம் மனைவி மேல் ஆசை வைத்திருப்பதையும், ஒரே ஒருநாள் அவளை அனுப்பினால் உடனடியாக மேனேஜர் பதவி வாங்கி தருவதாகவும் கூற, அதிர்ந்து விட்டான் குபேந்தர்.
அவசரம் இல்லை.. மெதுவாக யோசி, உன் மனைவியிடமும் பேசு, யாருக்கும் தெரியாமல் கிழக்கு கடற்கரைசாலையில் ரூம் போட்டுக் கொள்ளலாம். இப்படி ஒரு அதிர்ஷ்டம் உனக்கு கிடைக்காது என்று கூறி அனுப்பினார்.
குபேந்தர் அன்று இரவு தன் மனைவியிடம் சொல்ல அவளும் அதிர்ந்து விட்டார். தினமும் மனைவியிடம் கெஞ்சி சம்மதிக்க வைத்தான் குபேந்தர். அடுத்த ஞாயிறு ஸ்டார் ஹோட்டல் இரண்டு அறைகள். இரவு பத்து மணிக்கு மனைவியை அனுப்பிவிட்டான் குபேந்தர்.
அடுத்த நாளே பதவி உயர்வுக்கான வேலைகள் துரிதமாக செய்தார் அதிகாரி. ஒரே மாதத்தில் மேனேஜர் ஆனான் குபேந்தர். ஆனால் அவனுக்கே தெரியாமல் அறை எடுத்து அந்த மனைவியோடு ஜாலியாக இருந்தார் அதிகாரி.
விஷயம் தாமதமாக குபேந்தருக்கு தெரிய சண்டை போட்டான். அடிக்கடி சண்டை. அந்த மனைவி கோர்ட்டில் விவாகரத்து மனு கொடுத்தார். விவாகரத்தும் ஆனது.
அந்த அதிகாரி குபேந்தர் மனைவியை அழைத்துக் கொண்டு வடமாநிலம் ஒன்றிற்கு மாற்றல் வாங்கிச்சென்று விட்டார்.
இப்பொது நடுத்தெருவில் அந்த அப்பாவி கணவன்.
நாடு எங்கே போகிறது..?