Home » » உண்மையில் வாழைப்பழமும், காபியும் மலச்சிக்கலை ஏற்படுத்துமா?

உண்மையில் வாழைப்பழமும், காபியும் மலச்சிக்கலை ஏற்படுத்துமா?


உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா? அதற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லையா? மலச்சிக்கலை எப்போதும் சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. மலச்சிக்கல் ஒருவருக்கு ஏற்பட்டால், அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள முயல வேண்டும்.

தற்போது நிறைய பேர் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுவதற்கு, குறைவான அளவில் நீர் குடிப்பது, உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை அல்லது உட்கொள்ளும் சில மருந்துகள் தான் காரணம். ஆனால் அன்றாடம் நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும் மலச்சிக்கலை உண்டாக்கும் என தெரியுமா? இங்கு அந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உறைய வைக்கப்பட்ட உணவுகள்

உறைய வைக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்துக்கள் குறைவாகவும், கொழுப்புக்கள் அதிகமாகவும் இருக்கும். இம்மாதிரியான உணவுகள் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். எனவே இம்மாதிரியான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், குடலியக்க பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

வாழைப்பழம்

ஆம், வாழைப்பழமும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இது வாழைப்பழம் கனிந்துள்ளதைப் பொறுத்தது. கனியாத வாழைப்பழம் குடலியக்கத்தைப் பாதிக்கும். அதுவே நன்கு கனிந்த பழம் என்றால் அது மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

சிப்ஸ்

சிப்ஸ் மற்றும் எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளில் கொழுப்புச்சத்து அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும். இதனால் உண்ணும் உணவுகள் செரிமானமாவதில் பிரச்சனை ஏற்படும். செரிமான பிரச்சனை ஏற்பட்டால், மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும்

பால் பொருட்கள்

பால் பொருட்களும் மலச்சிக்கலை உண்டாக்கும். இதற்கு பால் பொருட்களில் உள்ள லாக்டோஸ் தான். இது வயிற்றில் வாய்வு உற்பத்தியை அதிகமாக்கி, வாய்வு தொல்லையை ஏற்படுத்தும். இந்த வாய்வு குடலியக்கத்தில் இடையூறை உண்டாக்கி, கழிவுகள் நகர்வதைத் தடுத்து, மலச்சிக்கலை சந்திக்க வைக்கும்.

காபி

வாழைப்பழத்தைப் போன்றே காபியும், சில சமயங்களில் மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும் அல்லது அதில் உள்ள காப்ஃபைன் உடலை வறட்சியடையச் செய்து மலச்சிக்கலால் அவஸ்தைப்படச் செய்யும்.

Popular Posts