Home » » ரூ.25/-க்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, ஜியோவிற்கு வோடாபோன் குறி..!

ரூ.25/-க்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, ஜியோவிற்கு வோடாபோன் குறி..!


இந்த வார தொடக்கத்தில், வோடபோன் 1 ஜிபி செலவில் 10 ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்குவதன் மூலம் அதன் 4ஜி திட்டங்களில் பயனர்களை அதிகம் ஈர்க்கும் ஒரு வாய்ப்பை கொண்டு வந்தது, இந்த வாய்ப்பானது வெறும் 25 ரூபாயில் 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை அளிக்கிறது சொல்லப்போனால் இது ரிலையன்ஸ் ஜியோவை விட மலிவானது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.50/-க்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது.

எனினும், வோடபோனின் இந்த 4ஜி பேக் சார்ந்த சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டியதுள்ளது. பின்பற்றினால் இந்த திட்டத்தின் மூலம் மேலும் இலவசமாஜி 9 ஜிபி அளவிலான 4ஜி தரவு பெற முடியும் அதை எப்படி பெறுவது என்பதை பற்றிய தொகுப்பே இது.


ரூ.250/- : 
இந்த வாய்ப்பின்படி, நீங்கள் ரூ.250/- செலவில் முதலில் வோடாபோனின் 1 ஜிபி அளவிலான 4ஜி தரவும் பின் இலவசமாக 9 ஜிபி அளவிலான தரவும் என மொத்தம் 10ஜிபி அளவிலான 4ஜி தரவை ரூ.250/-க்கு அதாவது 1ஜிபி ரூ.25/- என்ற விலையில் பெற முடியும்.

9 ஜிபி இலவச 4ஜி :
 இந்த வோடபோன் வழங்கும் 4ஜி வாய்ப்பை டிசம்பர் 31, 2016 என்ற காலகட்டத்திற்குள்ளாக வரை மட்டுமே வேலிடிட்டி கொண்டது என்பதும் நீங்கள் இந்த 9 ஜிபி இலவச 4ஜி தரவை குறிப்பிட்ட வேலிடிட்டி தேதிக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை : 
வோடபோன் வழங்கும் முதல் 1ஜிபி அளவிலான தரவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் பின் இலவசமாககிடைக்கும் 9 ஜிபி அளவிலான டேட்டாவை இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இந்த இலவச தரவை பயன்படுத்த முடியும்.

வோடபோன் ப்ளே :
 இந்த வாய்ப்பின் ஒரு பகுதியாக, வோடபோன் சந்தாதாரர்கள் திரைப்படங்கள், தொலைக்காட்சி, மற்றும் இசையை வோடபோன் ப்ளேவில் இலவச சந்தாவாக பெற முடியும். அதன் தரவு பயன்பாடானது இலவசமக வழங்கப்படும் 9 ஜிபி அளவிலான 4ஜி தரவில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Posts