Home » » ஆரோக்கியமான இந்த உணவுகள் உங்களை குண்டாக்கும் என்பது தெரியுமா?

ஆரோக்கியமான இந்த உணவுகள் உங்களை குண்டாக்கும் என்பது தெரியுமா?


உடல் எடையைக் குறைக்க நாம் டயட்டில் இருப்போம். ஆனால் அந்த டயட்டில் இருக்கும் போது நாம் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவோம். நாம் சாப்பிடும் சில ஆரோக்கியமான உணவுகள் எடையைக் குறைப்பதற்கு பதிலாக, அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இங்கு நம்மை குண்டாக்கும் சில ஆரோக்கியமான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகள் எவையென்று தெரிந்து கொண்டு, அவற்றை எடையைக் குறைக்கும் போது சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

செரில்கள்

பெரும்பாலானோர் டயட்டில் இருக்கிறேன் என்று காலையில் செரில்களை சாப்பிடுவார்கள். ஆனால் அதில் உடலால் கட்டுப்படுத்த முடியாத அளவில் சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளது என்று தெரியுமா? இதனை காலையிலேயே வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இரத்த சர்க்கரை அளவில் அதிகரிப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கத் தான் செய்யும்.

அவகேடோ

பழங்களிலேயே அவகேடோ மிகவும் ஆரோக்கியமானது தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த அவகேடோவில் நல்ல கொழுப்புக்கள் உள்ளது. எனவே இப்பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதனால் உடல் பருமனடையத் தான் செய்யும்.

நீலக்கத்தாழை தேன்

சர்க்கரை மிகவும் மோசமான சுவையூட்டி என்பதால், பலரும் நீலக்கத்தாழையில் இருந்து எடுக்கப்படும் தேனைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த தேனில் சர்க்கரையை விட அதிகமான அளவில் ஃபுருக்டோஸ் உள்ளது. இதனை உணவில் சேர்த்தால், அதனால் இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, அதுவே உடல் பருமனை அதிகரிக்கும்.

புரோட்டீன் பார்கள்

கடைகளில் விற்கப்படும் புரோட்டீன் பார்கள் ஆரோக்கியமானதாக காணப்படலாம். ஆனால் அதில் கொழுப்புக்கள், சர்க்கரை, கலோரிகள் போன்றவை வளமான அளவில் உள்ளது. ஆகவே இதனை உட்கொள்ளும் முன் யோசியுங்கள்.

க்ளூட்டன் ப்ரீ உணவுகள்

ஆம், க்ளூட்டன் ப்ரீ உணவுகள் கூட உடல் பருமனை அதிகரிக்கும். எப்படியெனில் இந்த உணவுகளில் க்ளூட்டன் இல்லாவிட்டாலும், கலோரிகள் அதிகம் இருக்கும். இதன் காரணமாக இந்த வகையான உணவுகளை உட்கொண்டால், உடல் பருமனடையும்.

Popular Posts